உள்ளூர் முட்டைகளுக்கான தேவை பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
இறைச்சி, மீன் மற்றும் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாகவும், அந்த விலையை நுகர்வோர் தாங்க முடியாமல் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே நாளில் நான்கு முதல் ஐந்து இலட்சம் வரை முட்டை தேவை அதிகரித்துள்ளது என்றார்.
இதேவேளை, நாளொன்றுக்கு முட்டை உற்பத்தி 30 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், கோழி தீவனத்தின் விலை 200 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், விலை குறைந்தால் முட்டை உற்பத்தி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
முட்டையின் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1