நுவரெலியா அகரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டுப் புத்தகத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சார்ஜன்ட் மற்றும் பயிற்சிப் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டு புத்தகம், பெண் பொலிசார் தங்குமிடத்தில் எரிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முறைப்பாட்டு புத்தகத்தின் ஒரு பகுதி தீயில் கருகவில்லை என்று பொலிசார் கூறுகின்றனர்.
இந்தப் புத்தகத்தை எரிக்குமாறு பொலிஸ் சார்ஜன்ட் தனக்கு அறிவுறுத்தியதாக பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பொலிஸ் சார்ஜன்ட் மறுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1