அஸ்வெசும: 688,000 முறையீடுகள்…9,000 ஆட்சேபனைகள்

Date:

‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பாக கிட்டத்தட்ட 688,000 முறையீடுகளும் 9,000 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் மதிப்பிடப்படுகின்றன.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இணையத்தளத்திலும், நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் நேரடியாகவும் ஜூலை 10 ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ‘அஸ்வெசும’ திட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்கள் மற்றும் விசாரணைகளுக்கு, பொது மக்கள் ‘1924’ என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டவுடன் ‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவித் திட்டத்தின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை உறுப்பினர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்