பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் வைத்தியர்களின் கவனக்குறைவினால் உயிரிழப்பா?

Date:

ராகம போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களின் கவனக்குறைவால் தாய் ஒருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலை ஊழியர்களும் வைத்தியர்களும் சரியான கவனிக்காமல் விட்டதாலேயே உயிரிழந்தார் என்று அவர்கள் கூறினர். மாகொல பமுனுவில பாடசாலையில் கடமையாற்றும் ஆங்கில ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தைக்காக முயற்சித்து வந்ததாகவும், அண்மையில் கொழும்பில் செயற்கை முறையில் கருத்தரித்ததாகவும், அவருக்கு 3 குழந்தைகள் உருவானதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

வைத்தியர்கள் அல்லது வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தால் மரணம் ஏற்பட்டதா என்பதை அறிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_imgspot_img

More like this
Related

Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

அரசாங்கத்தின் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய்...

தாலிபான் அரசின் புதிய கட்டுப்பாடு! அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்