படப்பிடிப்பின்போது மூக்கில் காயம்: ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை

Date:

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்பிடிப்பின்போது ஷாருக்கானுக்கு மூக்கில் அடிபட்டதாகவும், இதனால் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

முதலில் ஜூன் 2ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இப்படம் தவிர மற்றொரு படத்தின் படப்பிடிப்பிலும் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்துக்காக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்த்துக்கு ஷாருக் கான் சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா திரும்பியுள்ள ஷாருக் கான் தற்போது நலமுடன் இருப்பதாகவும், காயம் சரியானதும் விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கான் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்