26.8 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

9 நாட்களாக வெற்றிடமாக உள்ள பொலிஸ்மா அதிபர் பதவி

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் முடிவடைந்து இன்றுடன் (4) 9 நாட்கள் கடந்துள்ள போதிலும் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படாத காரணத்தினால் பொலிஸாரின் நிர்வாகப் பணிகள் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் அலுவல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கும் உத்தரவு வழங்குவதற்கும் அனுமதி வழங்குவதற்கும் ஒன்பது நாட்களாக பொலிஸ் மா அதிபர் இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான மூன்று பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சில தினங்களில் அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (வடமேற்கு) லலித் பத்திநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மேற்கு மாகாணம்) தேஷபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றம்) பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சப்ரகமுவ) பி.பி.எஸ்.எம்.தர்மரத்ன மூப்புப் பட்டியலின்படி முன்னிலையில் உள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் கடந்த 26ஆம் திகதி முடிவடைந்ததையடுத்து, பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இருந்த அவரது உடமைகளும் அகற்றப்பட்டுள்ளன.

நவம்பர் 2020 இல் இலங்கையின் 35வது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி.விக்ரமரத்ன மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்தபோது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு 3 மாத சேவை நீடிப்பை வழங்கினார்.

சேவை நீட்டிப்பும் கடந்த 25ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றிய பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு

east tamil

கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!

east tamil

பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

Pagetamil

ஐ.தே.கவின் பொதுச்செயலாளரானார் தலதா!

Pagetamil

Leave a Comment