முன்னாள் அமைச்சர் விஜயகலா விபத்தில் சிக்கினார்: சாரதி தூங்கியதால் வீதியை விட்டு விலகிய வாகனம்!

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் – கொழும்பு வீதியில் முந்தல், மங்கலேலிய பகுதியில் இன்று (29) காலை விபத்து  இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹலவத்த பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

வாகன சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்