யாழ் ஆயர், நாக விகாராதிபதியை சந்தித்த மைத்திரி!

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(29) காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாக விகாரதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேனா, இன்று வியாழக்கிழமை (29) முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்