25.6 C
Jaffna
March 1, 2025
Pagetamil
இலங்கை

நலன்புரி பதிவுகளில் முறைகேடிருந்தால் மேல் முறையீடு செய்யுங்கள்; குழப்பமடையாதீர்கள்: யாழ் அரச அதிபர்!

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் தங்களுடைய மேல்முறையீடுகளை ஜூன் 10 ம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் அந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார் .

சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் அரசஅதிபரிடம்வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

குறித்த சமுர்த்தி தெரிவில் ஏதாவது முறைகேடு இடம் பெற்றிருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் திகதி வரை தங்களுடைய மேன்முறையீடுகளைமாவட்ட சமுர்த்திஅலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்,

அந்த மேல்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவே இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டமான சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சில பிரதேச செயலகங்கள் கூடிய மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் – கஜேந்திரகுமார்

Pagetamil

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

Pagetamil

இனிய கற்பனை: எப்போது திகட்டும் என்.பி.பி?

Pagetamil

ப்ளூமெண்டல் ரயில் கடவை நாளை பூட்டு

Pagetamil

புதிய வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!