ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் யாழ் மாணவன் தற்கொலை!

Date:

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) சடலமாக மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, நாரத்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் இன்று (16) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது, மாணவன் சடலமாக தொங்குவதை கண்டு அலறியுள்ளார்.மற்ற மாணவர்களும் அங்கு வந்து, மாணவனின் உடலில் உயிர் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்துள்ளனர்.

எனினும், மாணவன் உயிரிழந்திருந்தார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தனர்.மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி நேரில் வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன்படி, நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது.

சடலத்தின் பிரேதப் பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

spot_imgspot_img

More like this
Related

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில்...

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக...

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்