பல்கலைகழகத்தில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்.இந்து பழைய மாணவன்: முழுமையான விசாரணை கோரும் குடும்பத்தினர்!

Date:

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையை சேர்ந்த மாணவனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் முழுமையான விசாரணை கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, நாரத்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (23) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் இன்று (16) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது, மாணவன் சடலமாக தொங்குவதை கண்டு அலறியுள்ளார்.மற்ற மாணவர்களும் அங்கு வந்து, மாணவனின் உடலில் உயிர் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்துள்ளனர்.

எனினும், மாணவன் உயிரிழந்திருந்தார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தனர்.மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி நேரில் வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன்படி, நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது.

சடலத்தின் பிரேதப் பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர், பல்கலைகழகத்தில் பாரம் தூக்கல் போட்டியில் முதலிடம் பிடித்ததாகவும், இதனால் சில போட்டித்தன்மைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்