24.6 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

ரணிலுக்கு பசில் வழங்கிய உத்தரவாதம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்க தரப்பு கட்சித் தலைவர்களினால் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட அமைச்சர்கள் குழு கலந்துகொண்டது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, சில தொழிற்சங்கங்களும் தமது கட்சியைச் சேர்ந்த சில உள்ளுர் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் முரண்பாடான நிலையில் கருத்து வெளியிடுவதாகவும், ஆனால் அந்த பிரச்சினைகள் எதுவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்காத அளவுக்கு தீவிரமானவை அல்ல எனவும் தெரிவித்தார்.

கலந்துரையாடல் மூலம் ஒன்றிணைந்து செயற்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் எனவும், அதற்காக மாதத்திற்கு ஒரு நாள் ஜனாதிபதியை நேருக்கு நேர் சந்திப்பது அவசியமானது எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் உட்பட பொதுஜன பெரமுன கட்சி அண்மைக்கால வரலாற்றில் பல ஜனாதிபதிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், அந்த அனுபவத்தின் படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் இல்லாத வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செயற்பாட்டுப் பணியாளர்கள் இருப்பதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் கடமைகளை தாம் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ஷ, மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

“ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக சாகல ரத்நாயக்கவும், ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவும் இணைந்து செயற்படுவது மிகவும் இலகுவானது. அவர்கள் எந்த நேரத்திலும் கலந்துரையாடலுக்கும் கேட்பதற்கும் தயாராக உள்ளனர்.

இப்பதவிகள் கிடைக்கும் போது பலருக்கு போன் செய்யக்கூட வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இருவரும் அந்த பலவீனத்தால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் அதை மதிப்பீடு செய்ய வேண்டும்.

மேலும் அந்த முக்கியமான அம்சத்தை பராமரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆனால், நமது பிரதமர் சற்று பிஸியாக இருப்பதால் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்வது கடினமாக உள்ளது. ஆனால் ஜனாதிபதி அப்படியல்ல. ஜனாதிபதி எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒரு அழைப்பைப் பெற்ற உடனேயே அதற்குப் பதிலளிப்பார். ஜனாதிபதியாக அப்படிச் செய்திருப்பது சிறப்புப் பாராட்டுக்குரியது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் இந்த ஆதரவை வழங்கியுள்ளோம். பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய ஏனைய கட்சிகளும் இதற்கு உடன்படுகின்றன. இப்படி மாதம் ஒருமுறை கூடி விவாதித்தால், உள்ளூர் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் சில ஆட்சேபனைகளை நமது தொழிற்சங்கங்கள் சிலவற்றாலும் தீர்க்க முடியும். அத்துடன், தற்போது முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளுக்கான எமது முன்மொழிவுகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும்” என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதுவரை வழங்கப்பட்டு வந்தது, தொடர்ந்து வழங்கப்படும் என காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment