அக்மிமன, கபுஹெம்பல பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று அதிகாலை வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அக்மிமன பொலிஸார் தெரிவித்தனர்.
கபுஹேம்பல கட்டுஹேனாவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திலிப் நாணயக்கார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வீட்டின் அறையின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை நான்கு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் அவரை தலையில் சரமாரியாக வெட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் தலையில் கத்தியை குத்தி வைத்துவிட்டு கொலையாளி தப்பியோடி விட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1