26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

கனடாவிலிருந்து பிரித்தானிய திருமணத்துக்கு சென்ற 3 தமிழ் பெண்கள் விபத்தில் பலி

பிரித்தானியாவில் நடக்கும் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக கனடாவிலிருந்து சென்ற 3 தமிழ் பெண்கள் கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சசெக்ஸ் பிராந்தியத்தில் ஜூன் 10 சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வெள்ளை நிற BMW 220 கார் மற்றும் சாம்பல் நிற Mercedes C200 ரக கார் என்பன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

A285 இல் கீப்பர்ஸ் காட்டேஜ் மற்றும் லிட்டில் ஃபார்ம் கேம்ப்சைட்டுக்கு இடையே விபத்து நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிஎம்டபிள்யூ காரில் இருந்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நான்காவது நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மெர்சிடிஸ் காரில் இருந்த மூன்று பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் – ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!

Pagetamil

காணாமல் போன இராணுவ துப்பாக்கிகள் பாதாள குழுக்களில்; 13 வீரர்கள் கைது

east tamil

அனுர அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள்: நாமல் ராஜபக்சவின் இருமுக பாராட்டுகள்

east tamil

கலாசார மையத்தின் பெயர் மாற்றம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Pagetamil

ஜகத் விஷந்தவுக்கு பதவியுயர்வு

east tamil

Leave a Comment