ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரைத்துள்ள போதிலும் அதனை சீர்திருத்த நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருரை மேற்கோளிட்டு, கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான துறைசார் மேற்பார்வைக் குழு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டாம் என பரிந்துரை செய்திருந்தது.
“துறைசார் மேற்பார்வைக் குழு தனது பரிந்துரையைக் கொண்டு வருவதற்கு முன்பே அரசாங்கம் சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. எனவே அரசாங்கம் அசல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்” என்று அமைச்சர் கூறினார்.
துறைசார் கண்காணிப்புக் குழுவின் தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



