26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

பெரும் கடத்தல் வலையமைப்பின் ஏஜெண்டா அலி சப்ரி?: விமான நிலைய பிரமுகர் முனையத்திலும் இனி பரிசோதனை!

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிரமுகர் ஓய்வறையின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் பயணப்பொதிகள் சுங்கத்தினால் ஸ்கான் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்குள் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கடத்தப்பட்டதன் நேரடி விளைவு இந்த நடவடிக்கையாகும்.

பிரமுகர் முனையத்தின் வழியாக செல்பவர்கள் அல்லது வருபவர்கள், ஏற்கனவே உள்ள நடைமுறையைப் போலவே ஆவண சரிபார்ப்புக்களை மேற்கொள்வார்கள்.. எவ்வாறாயினும், அதன்பிறகு, அவர்களின் பொதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கான ஸ்கானிங் இயந்திரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக விஐபி ஓய்வறையில் இயந்திரம் வைக்கப்படும். தற்போது, எம்.பி.க்கள் தான் ஓய்வறையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கடந்த செவ்வாய்கிழமை, அலி சப்ரியிடம் 3.4 கிலோ மதிப்புள்ள தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுங்கத்துறை அவருக்கு 7.4 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்தது.

அலிசப்ரியுடன், அவரது “உதவியாளர்” என்று வர்ணிக்கப்பட்ட மொஹமட் ஃபைரூனும் வந்திருந்தார். அவர் 19 மொபைல் தொலைபேசிகளுடன், விமான நிலைய முனைய கட்டிடத்தின், அறிவிக்க வேண்டிய கடமை எதுவும் இல்லாதவர்களுக்காக கிரீன் சனல் வழியாக நடப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சப்ரி இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆறு தடவைகள் டுபாய்க்கு பயணம் செய்துள்ளதாக சுங்க விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர் ஒரு பணக்கார கடத்தல் குழுவின் கடத்தல்காரராக செயல்பட்டிருக்கலாம் என்று சுங்கத்துறை சந்தேகித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காணாமல் போன இராணுவ துப்பாக்கிகள் பாதாள குழுக்களில்; 13 வீரர்கள் கைது

east tamil

அனுர அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள்: நாமல் ராஜபக்சவின் இருமுக பாராட்டுகள்

east tamil

கலாசார மையத்தின் பெயர் மாற்றம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Pagetamil

ஜகத் விஷந்தவுக்கு பதவியுயர்வு

east tamil

மன்னாரில் இளம் பெண் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment