தொட்டலங்காவில் உள்ள வீட்டில் போதைப்பொருள் கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டபோது, பணம் மற்றும் தங்க மோதிரங்களை திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
மே 16 அன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தொட்டலங்காவில் உள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. வீட்டை சோதனை செய்தபோது, இந்த காவலர் ரூ.16 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு தங்க மோதிரங்களை திருடிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த காவலர் பணம் மற்றும் தங்கத்தை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கான்ஸ்டபிள் திருடப்பட்ட தங்க மோதிரங்களை அடகு வைத்ததாகவும், இரண்டு மோதிரங்களின் ரசீது அவரிடம் இருந்ததாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.