24.6 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

நடிகை, சட்டத்தரணிகளிடம் திருமணம் செய்வதாக கூறி ரூ.16 மில்லியன் மோசடி: பேஸ்புக் ரோமியோ கைது!

முகநூல் கணக்கு மூலம் நடிகை ஒருவருடன் நட்பாக பழகி, திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து ரூ.6.5 மில்லியன் மோசடி செய்த நபரை மினுவாங்கொடை நீதவான் டி.தெனபாது விளக்கமறியலில் வைத்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு இளம் சட்டத்தரணிகளுடன் நட்பாக பழகி அவர்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து இருவரிடமும் ரூ. 9.9 மில்லியன் வரை பணம் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மஹர சிறைச்சாலையினரால் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கஹவத்தை இரத்தினபுரியைச் சேர்ந்த லசந்த லியனகே (27) என்ற சந்தேக நபர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த வழக்கில், கொழும்பு பல்கலைக்கழகத்தில் அழகியல் கற்கை நெறியை மேற்கொள்வதுடன், நடிகையாக பணிபுரிந்து வரும் மினுவாங்கொடை, பட்டதுவன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 23 வயதான யுவதியே பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டது.

சந்தேக நபர் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர் நடிகைகளுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களுடன் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்துள்ளதாகவும், அவர் சமூக நல ஆர்வலராக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேகநபர் முகநூல் ஊடாக யுவதியுடன் நட்பை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பின்னர் யுவதின் வீட்டிற்கு பலமுறை சென்று வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததையடுத்து, மனுதாரரின் பெற்றோரும் திருமணத்திற்கு ஆசிர்வாதம் வழங்கியதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு, சந்தேக நபர் பல்வேறு தேவைகளை முன்வைத்து நடிகையிடம் தனது வங்கிக் கணக்கில் ரூ.6.5 மில்லியன் ரூபா பெற்றுள்ளார். வங்கி பதிவேடுகளில் இருந்து சரிபார்க்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கொழும்பு நீதிமன்றில் பணிபுரியும் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவரிடம் இருந்து ரூ. 5.5 மில்லியன் மற்றும் கம்பஹா நீதிமன்றத்தின் மற்றுமொரு சட்டத்தரணியை ஏமாற்றி அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து ரூ. 4.9 மில்லியன் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேற்கூறிய இரண்டு நீதிமன்றங்களாலும் இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment