மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட விராட் கோலி, கவுதம் கம்பீர், நவீன்-உல்-ஹக்குக்கு அபராதம்

Date:

ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி மற்றும் எல்எஸ்ஜி ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 43 வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கை கொடுத்துக் கொண்ட போது ஆர்சிபி வீரர் கோலி மற்றும் எல்எஸ்ஜி அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எல்எஸ்ஜி வீரர் அமித் மிஸ்ராவும், கோலியுடன் வாக்குவாதம் செய்தார். அதற்கு முன்னதாக கோலியும், நவீன்-உல்-ஹக்கும் வாக்குவாதம் செய்தனர்.

இருந்தபோதும் இரு அணிகளை சேர்ந்த மற்ற வீரர்கள் அவர்களை விலக்கி விட்டனர். ஆட்டம் முடிந்த நிலையில் ஆடுகளத்தில் அந்த சில நிமிடங்கள் அனல் பறந்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. ஆடுகளம் மிகவும் நிதானமாக இருந்தது. ஆனாலும் லக்னோ வீரர்கள் அதிரடியாக ஆட முயன்று விக்கெட்டை இழந்தனர். அதே நேரத்தில் அந்த அணியின் கப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக 9 விக்கெட்டுகளை இழந்த பிறகே துடுப்பெடுத்தாட வந்தார். லக்னோ அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் லக்னோ அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் போதெல்லாம் அதை ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார் கோலி. மைதானத்தில் ஆர்சிபி அணிக்கான ஆதரவும் அமோகமாக இருந்தது. துடுப்பாட்டத்தில் 30 பந்துகளில் 31 ரன்களை எடுத்த அவர் 2 கட்ச்களையும் பிடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக், துடுப்பெடுத்தாடிய போது கோலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுதான் ஆட்டம் முடிந்த பிறகு கம்பீர் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் எழ காரணம் என தெரிகிறது. ஆட்டம் முடிந்த பிறகு கோலி, நவீன்-உல்-ஹக் உடன் கை கொடுத்த போது அவர் ஏதோ கோலியிடம் கேட்டுள்ளார். அதுதான் இது அனைத்திற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

அதன் பின்னர் பரிசளிப்பு நிகழ்விற்கு பிறகு கோலியுடன் பேசிக் கொண்டிருந்த லக்னோ வீரர் மேயர்ஸை இடைமறித்து அழைத்து சென்றார் கம்பீர். இது அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது.

இந்த நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக்கிற்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டியின் போது, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/i/status/1653240202352267264

நடப்பு சீசனில் இரு அணிகளும் இதற்கு முன்னர் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. அதில் லக்னோ வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் கவுதம் கம்பீர் ‘அமைதியா இருக்கணும்’ என்பதை சொல்லும் விதமாக சைகை காண்பித்திருந்தார். அவரது செயல் அப்போது விமர்சிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்