தமிழ் சங்கதி

இது ‘தமிழ் தேசிய கள்ளக்காதல்’ கதை!

அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

தமிழ் தேசியம் பேசும் கட்சியொன்றின் இளநிலை பிரமுகருக்கும் அந்தப் பெண்ணுக்குமிருந்த திருமணத்துக்கு அப்பாலான உறவு ஊரறிந்த- உலகறிந்த விவகாரம்.

இந்த காதல் விவகாரத்தினாலேயே அரசியல் பிரமுகரின் குடும்பமும் பிரிய… பின்னர், அவருடன் உறவில் இருந்த பெண்ணின் குடும்பமும் பிரிந்தது. பின்னர் அவர்கள் சட்டபூர்வமற்ற கணவன்- மனைவி நெருக்கத்துடன் வாழ்ந்து, ஏதோ தகராற்றில் அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டார்.

அந்தப் பெண் தற்கொலை செய்ததை தொடர்ந்து, சமூக வலைத்தளவாசிகள் பலரும் தவறான கருத்தொன்றை பகிர்ந்தனர். அதாவது, சட்டத்தரணிகளின் உதவியுடனோ, அரசியல் செல்வாக்கினோலோ அந்தஇளநிலை அரசியல் பிரமுகர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விட்டார் என பலரும் கருத்திட்டனர்.

அது தவறான கருத்து.

இலங்கை சட்டத்தின்படி, தற்கொலை குற்றச்செயல். அதனால் தற்கொலைக்கு தூண்டியது, காரணமாக இருந்தார் என்ற அடிப்படையில் பொதுவாக விசாரணை நடத்தப்படுவதில்லை.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பதை உறுதிப்படுத்த பொலிசார் முயல்வார்கள். தற்கொலையென்பது நிரூபணமானால், அந்த வழக்கு அத்துடன் முடிக்கப்பட்டு விடும்.

அந்தப் பெண் தற்கொலை விவகாரத்தில், அரசியல் பிரமுகர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டதும் இதனால்தான். அந்தப் பெண் தற்கொலை செய்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பதை உறுதிசெய்யவே அவர் அழைக்கப்பட்டார். பொலிசாரின் விசாரணையில் தற்கொலை உறுதியானதும், அரசியல் பிரமுகர் விடுவிக்கப்பட்டார்.

ஆகவே, திருமணத்துக்கு அப்பாலான உறவினாலோ, திருமணத்துக்கு முன்னதான உறவினாலோ அல்லது ஏதாவது வழியிலோ பாதிக்கப்பட்ட யாராவது, உங்களுக்கு நீதி வேண்டுமென நினைத்தாலோ அல்லது குறைந்தபட்சம் உங்களை ஏமாற்றியவரை பழிவாங்க வேண்டுமென நினைத்தாலோ தற்கொலை முடிவெடுக்காதீர்கள். நீங்கள் அப்படியொரு முடிவெடுப்பது, உங்களை ஏமாற்றியவரை மிகச்சுலபமாக தப்பிக்கவே வழியேற்படுத்தும்.

இந்த விவகாரத்தையொட்டி இன்னொரு சுவாரஸ்ய சம்பவமொன்றுமுண்டு.

அந்தப் பெண்ணின் மரண விவகாரத்தின் பின்னர், தமிழ் சூழலிலோ, இலங்கையிலோ எந்த பொது அமைப்போ, பெண்கள் அமைப்போ, நியாயம் கோரி குரல் எழுப்பவில்லை. அரசியல் பிரமுகர்களை பகைத்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. தமிழ் சூழலில் பெண்கள் அமைப்புக்களோ, பொது அமைப்புக்களோ வினைத்திறனாகவும், நம்பிக்கை தரக்கூடியதாகவும், பலமாகவும் உருவாகாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றுஸ்ரீ இந்த மனநிலைதான்.

பிரச்சினைகளை தெரிவு செய்து குரல் எழுப்புவதுதான் அவர்களின் பலவீனம்.

பெண்கள் அமைப்புக்கள், பொதுஅமைப்புக்கள்தான் அப்படி… விட்டுவிடலாம், அந்த கட்சியின் மகளிர் அணியென்று ஒன்று உண்டல்லவா… அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிய, அவர்களை தொலைபேசியில் அழைத்தோம்.

அந்த பிரதான கட்சியின் மகளிர் அணி தற்போது சிதைந்து போயுள்ளது. தற்போது தலைவர், செயலாளர் யாருமில்லை.  எஞ்சியிருக்கும் பிரமுகர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், “நாங்கள் என்ன செய்யலாம்?… என்னயிருந்தாலும், அவர்தானே பேசலாம்“ என ஒரு மகளிர் அணி நிர்வாகியை கையைக்காட்டினார்கள்.

நாம் தொடர்பு கொண்ட எல்லா மகளிர்அணியினரும், ஒரு பிரமுகரையே கையைக்காட்டினர்.

சரி, அவர் ஏன் பேசவில்லையென்றாவது கேட்டிருக்கலாமே என இறுதியாக பேசிய மகளிரணி பிரமுகரிடம் கேட்டோம்.

அந்த பிரமுகர் பாவம் என குறிப்பிட்டு, அவரது கண்ணீர்க்கதையை உருகும் குரலில் சொன்னார் அந்த மகளிரணி பிரமுகர்.

அவர் உருகிச் சொன்ன விவகாரத்தில் சாரம்சம் இதுதான்- அந்த மகளிரணி பிரமுகருக்கும் திருமணத்துக்கு அப்பாலான காதலாம். இதனால் கணவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டார். காதலனுடனேயே வாழ்கிறாராம். முன்னாள் கணவரின் குடும்பத்துடனான தகராற்றில் அவர் கொஞ்சம் நெருக்கடியில் இருக்கிறார் என்றார்.

மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா? துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா?அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

அங்கஜன் வாங்கிக்கொடுத்த சிற்றுண்டிகளை பற்றைக்குள் வீசிய முன்னணியினர்!

Pagetamil

இதுவரை போராடி எதைக் கண்டோம்?: இலங்கை தமிழ் அரசு கட்சி செயலாளரின் கேள்வியும், சில யதார்த்தங்களும்!

Pagetamil

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு: கூட்டத்தை ஏற்பாடு செய்த சிறிதரன் எம்.பி ‘மிஸ்ஸிங்’!

Pagetamil

‘கரைத்துறைப்பற்று தராசு கூட்டாளிகள் சுயேச்சைக்குழுவென்றுதான் நானும் நினைத்தேன்’: எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil

முல்லைத்தீவு முஸ்லிம் கூட்டணி தவறுதான்… கட்சியின் தலைவர் நானா- மாவைக்கு வந்த குழப்பம்: இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!