இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகரும், வலி வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான சோ.சுகிர்தனின் வீட்டில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தனக்குத்தானே தீ வைத்து எரிந்து தற்கொலைக்கு முயன்றதை தொடர்ந்து, கிணற்றிலும் குதித்துள்ளார்.
அவர் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.
சுகிர்தனுடன் நெருக்கமாக பழகிய இளம் குடும்ப் பெண்ணொருவரே அவரது வீட்டில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவர் முதலில் தனக்கு தானே தீ வைத்துள்ளார். தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து, கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கிணற்றிலிருந்தும் மீட்கப்பட்ட இளம்பெண், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இன்று காலையில் தெல்லிப்பளை பொலிசாரால் சுகிர்தன் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண், வலி வடக்கு பிரதேசசபையில் பணியாற்றுபவர். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவரும் கணவரை பிரிந்து வாழ்கிறார். விவாகரத்திற்கான சட்டபூர்வ செயற்முறை நடந்து வருகிறது.
சுகிர்தனின் மனைவி நீண்டகாலமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பெண் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது இதுவரை தெரிய வரவில்லை.