காதலை கைவிட மறுத்த முன்னாள் காதலனை கடத்தி, மின்சாரம் பாய்ச்சி நிர்வாணமாக வீதியில் வீசிய இளம்பெண் கைது!

Date:

இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு, நிர்வாணமாக சாலையில் வீசப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரியான பெண்ணை  போலீசார் கைது செய்தனர். தன் மீதான காதலை கைவிட மறுத்ததாலேயே இளைஞனை அவர் ஆள் வைத்து அடித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எர்ணாகுளத்தில் ,ந்த சம்பவம் நடந்தது. வரக்கலாவைச் சேர்ந்த லட்சுமிபிரியா என்ற பெண்ணே கைது செய்யப்பட்டார்.

லட்சுமிபிரியாவின் வழிகாட்டுதலின்படி ஒரு கும்பல் அந்த இளைஞரை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

லட்சுமிப்பிரியாவும், தாக்கப்பட்ட இளைஞனும் காதலித்துள்ளனர். பின்னர் மற்றொரு இளைஞனில் லட்சுமிப்பிரியாவுக்கு காதல் வந்துள்ளது. முதல் காதலனை கைவிட்டு, புது காதலனுடன் உறவை ஆரம்பித்துள்ளார்.

முதல் காதலன் உறவை முறித்துக் கொள்ள மறுத்ததையடுத்து,  தற்போதைய காதலனுடனும் இணைந்து லட்சுமிப்பிரியா குற்றத்துக்கான சதி செய்ததாக தெரியவருகிறது.

இந்த வழக்கில் லட்சுமிபிரியா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியான எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

லட்சுமிபிரியா உள்ளிட்ட 8 பேர் இளைஞரை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். கும்பலில் 6 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. லட்சுமிபிரியாவின் தற்போதைய காதலருக்கு சொந்தமான காரில் இளைஞர் கடத்தப்பட்டார்.

எனினும், லக்ஷ்மிபிரியாவின் தாயார் இந்த தகவல்களை மறுத்துள்ளார்.

தாக்கப்பட்ட இளைஞனுடன் தனது மகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

“இருவரும் நண்பர்கள். இருப்பினும், பின்னர் அவர் அவளை வாய்மொழியாகத் துன்புறுத்தத் தொடங்கினார். அவரது தொலைபேசிக்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பினார். அவர் தனது பிரச்சனையிலிருந்து விடுபட உதவுமாறு தனது நண்பர்களைக் கேட்பது பற்றி என்னிடம் கூறினார்” என்று லட்சுமிப்ரியாவின் தாயார் கூறினார்.

மேலும், அந்த இளைஞரை தாக்குவதற்கு லட்சுமிபிரியா எந்த சதித் திட்டத்தையும் தீட்டவில்லை என்றார்.

“இளைஞரை அடித்தது அவளுடைய நண்பர்கள்தான், என் மகள் அல்ல. அவள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டாள். லட்சுமி திறமையான மாணவி. சந்தேகம் இருந்தால் அவளுடைய ஆசிரியர்களிடம் கேட்கலாம்,” என்று அவர் கூறினார்.

தனது மகனை விடுவிக்க லட்சுமிபிரியா பணம் கேட்டதாக இளைஞரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். லட்சுமிப்பிரியாவும் அவரது நண்பர்களும் தனது மகனை கொடூரமாக தாக்கியதை அவர் வெளிப்படுத்தினார். இருவரும் உறவுமுறையில் இல்லை என்றும் அவர் கூறினார்.

“காருக்குள் வைத்து அடித்து உதைத்தனர். முகத்தை கருப்புத் துணியால் மறைத்துவிட்டு, செயின், கைக்கடிகாரம் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். அங்கிருந்து பழைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, மீண்டும் தாக்கியுள்ளனர். இம்முறை, பாரமான பொருட்களால் தாக்கினர். கொட்டானால்  அவரைத் தாக்கி மின்சாரம் பாய்ச்சினார். அந்த சித்திரவதையின் வீடியோ அவர்களிடம் உள்ளது. இந்த கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து என் மகன் இன்னும் மீளவில்லை” என்று தந்தை கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்