நிர்வாண வீடியோ மூலம் இளைஞர் ஒருவரை மிரட்டிய வழக்கில் 3 இளம் பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் கொச்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
தம்மனத்தைச் சேர்ந்த இளைஞரை காக்கநாடு தேவாலயத்தில் சந்தித்த அஞ்சு என்ற யுவதி, அவருடன் சிரித்து சிரித்து பேசியுள்ளார். இதனால் அந்த இளைஞரும் மெய்மறந்து பேசினார்.
சிறிது நேரம் பேசியதில் இருவரும் நெருக்கமாகினர். அந்த இளைஞனிடம் அஞ்சு காதலை சொல்லியுள்ளார்.
பின்னர், முளவுகாடு பொன்னாரிமங்கலம் பிஎச்சி அருகே உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த இளைஞரும் அங்கு சென்றார்.
அங்கு சென்ற இளைஞன், அஞ்சுவுடன் நெருக்கமாக இருக்க முனைந்த போது, திடுதிப்பென அங்கு வந்தவர்கள், அந்த இளைஞரை அடித்து நிர்வாணமாக்கி வீடியோ படங்களை எடுத்தனர். பணம், மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்றனர்.
ஆனால் அவர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், பணம் தராவிட்டால் அந்த வீடியோவை பரப்பி விடுவேன் என மிரட்டியதையடுத்து, அந்த இளைஞன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, வென்னாலையைச் சேர்ந்த ஆஷிக், அவரது மனைவி ஷஹானா, மட்டஞ்சேரியைச் சேர்ந்த அருண் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அஞ்சு மற்றும் மேரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஞ்சு மற்றும் மேரி உடன்பிறந்தவர்கள்.



