பள்ளிவாசல் நிர்வாக தெரிவு கூட்டத்தால் சர்ச்சை: ஒருவர் பலி; மூவர் கைது; சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

Date:

பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்டசெந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற நிர்வாக தெரிவு கூட்டம் ஒன்றில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த கூட்டத்தில் பங்குபற்றியவர்களில் சிலர் எதிர்வரும் நோன்பு பெரு நாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன் மற்றுமொரு குழுவினர் சில தினங்களில் புதிய நிர்வாகம் தெரிவு செய்ய பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.இதனை அடுத்து எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் கூட்டத்தை நிறைவு செய்து திரும்பியவர்கள் இரு குழுக்களாக பிரிந்த மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இம் மோதல் சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை மலையடி கிராமம் கிராம சேவையாளர் பிரிவு 4 பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்