26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
உலகம்

ருவிட்டர் லோகோவை மீண்டும் மாற்றினார் எலான் மஸ்க்!

ருவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மீண்டும் பழைய படி நீலக் குருவியாக மாற்றி உள்ளார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘Dogecoin’ லோகோவை ருவிட்டரின் லோகோவாக அவர் மாற்றி இருந்தார். மஸ்கின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. Dogecoin நிறுவன முதலீட்டாளர்கள் அவர் மீது தொடுத்துள்ள வழக்கை திசை திருப்பும் நோக்கில் இதை செய்திருக்கலாம் என்பது அதில் முதன்மையானதாக இருந்தது.

ருவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்தத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ருவிட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ருவிட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது.

அந்த வகையில் ருவிட்டர் நிறுவனத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக் குருவி லோகோவை மஸ்க் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாற்றி இருந்தார். அது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த மாற்றம் ருவிட்டர் வலைதள பக்கத்தில் மட்டுமே பிரதிபலித்தது. ருவிட்டர் மொபைல்போன் செயலியில் வழக்கமான அதே நீலக் குருவி லோகோவை தான் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நாய் பட லோகோவை மாற்றிவிட்டு மீண்டும் குருவியை வைத்துள்ளார் மஸ்க்.

ருவிட்டர் தளம் தொடங்கப்பட்ட 2006 முதல் இதுவரை சில தருணங்களில் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் முறையாக அண்மையில்தான் நீலக் குருவிக்கு பதிலாக நாய் படம் வைக்கப்பட்டது. மற்ற அனைத்து தருணங்களிலும் நீலக் குருவியில் சிறுசிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அதே நீலக் குருவி லோகோவாக ருவிட்டருக்கு திரும்பி உள்ளது. ‘எங்கள் தளத்தின் லோகோ எங்களது அடையாளம் மட்டுமல்ல அது எங்கள் சொத்து’ என ருவிட்டர் தளத்தின் பிராண்ட் டூல்கிட்டில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் மீண்டும் தன் அடையாளத்தை மீட்டெடுத்துள்ளது ருவிட்டர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

Leave a Comment