லங்கா ஐஓசி நிறுவனம் 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.
26 நிரப்பு நிலையங்கள் QR ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், QR கோட்டாவை பின்பற்றத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு நேற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்ச்சியாக QR ஒதுக்கீடுகளை கடைப்பிடிக்கவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் லிமிடெட் ஆகியவற்றின் முகாமைத்துவம் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1