விபத்தில் தூக்கி வீசப்பட்டவர் பக்கத்து வீட்டு கூரையில் விழுந்தார்!

Date:

ஹொரண மலாகல வீதியில் பாதுக்க குருகொட சமுர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று பிற்பகல் காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் தீப்பற்றி எரிந்ததுடன், ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து சென்றவர் சுமார் பதினைந்து மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு எதிர்திசையில் உள்ள வீடொன்றின் கூரையில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் கம்பி வேலிக்கு மேலாக தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்தார்

வளைவான பகுதியில் எதிர்எதிர்திசையில் வந்த காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடையின் மேற்கூரையில் விழுந்தவரை பிரதேசவாசிகள் மற்றும் ஹொரண தீயணைப்பு பிரிவினர் கீழே இறக்கி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரனின் பிரம்மாண்ட கட்அவுட் இலங்கையில் வைக்கப்பட்டதா? வைரலான படத்தின் உண்மை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தையும், கட்டடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தமிழீழ...

பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்த 13 வயது மாணவி உயிரிழப்பு

நுவரெலியா, நோர்வூட் பகுதியில் பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்து 13...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்