வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாளால் தாக்கி மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்க முற்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் நாட்டின் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாள்வெட்டுத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது ஒரு கையும் ஒரு விரலும் கத்தியால் தாக்கப்பட்டு அந்த விரலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவில, வென்னப்புவ, தங்கொடுவ மற்றும் கொஸ்வத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற சுமார் பதினைந்து தங்க நகை திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார்.
மனித படுகொலை தொடர்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.