உலகெங்கிலும் உள்ள 1.9 பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்த சமயத்தில், பல்வேறு நாடுகளில் நோன்பு நேரத்தில் ஏற்பட்டுள்ள வித்தியாசமான கால அளவு பற்றிய விபரத்தை தருகிறோம்.
இந்த ஆண்டு நோன்பு நேரம் ஒருவரின் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து 10 முதல் 18 மணிநேரம் வரை அமையும்.
பூமியின் சாய்வு மற்றும் சூரியனின் நிலை ஆகியவற்றால் ஏற்படும் பகல் மற்றும் இரவின் நீளத்தின் மாறுபாடுகளால், gல்வேறு நாடுகளில் நோன்பு நேரங்களின் அளவில் வேறுபாடு ஏற்படுகிறது.
பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ள நாடுகளில், நோன்பு நேரம் குறைவாக இருக்கும், மேலும் தொலைவில் உள்ளவர்கள், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு அட்சரேகைகளில், நீண்ட நோன்புகாலங்களை அனுபவிக்கின்றனர். சில பகுதிகளில் நோன்புகாலம் 20 மணிநேரத்திற்கு மேல் இருக்கலாம்.
சூரியன் மறையாத கிரீன்லாந்து மற்றும் அலாஸ்கா உள்ளிட்ட சில பகுதிகளில், இஸ்லாமிய அறிஞர்கள் சவூதி அரேபியாவில் மெக்காவின் நோன்பு நேரத்தைப் பின்பற்றுமாறு முஸ்லிம்களை பரிந்துரைக்கின்றனர்.
இஸ்லாத்தின் புனிதமான இடமான காபாவின் தாயகமாக சவூதி அரேபியா இருப்பதால் அவர்கள் நீண்ட காலமாக இந்த அமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள சராசரி நோன்பு நேரம் பொதுவாக 14 முதல் 15 மணிநேரம் வரையாக குறைகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாரில், முஸ்லிம்கள் புனித மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வரை நோன்பு இருப்பார்கள்.
இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமான ரமலான், மார்ச் 23 அன்று தொடங்க உள்ளது, மேலும் உணவு மற்றும் பானங்களைத் தவிர்ப்பது மற்றும் ஒருவரின் நம்பிக்கை, பொறுமை மற்றும் சமூக உணர்வை மேம்படுத்தும் நடைமுறைகளில் ஈடுபடுவது ஆகியவை அடங்கும்.
2023 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் அதிக மற்றும் குறைந்த மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல் இங்கே:
மிக நீண்ட நோன்பு நேரம்
1. நூக், கிரீன்லாந்து: 18 மணிநேரம்
2. ரெய்காவிக், ஐஸ்லாந்து: 18 மணிநேரம்
3. ஹெல்சின்கி, பின்லாந்து: 17 மணிநேரம்
4. கிளாஸ்கோ, ஸ்கொட்லாந்து: 17 மணிநேரம்
5. ஒட்டாவா, கனடா: 17 மணிநேரம்
6. லண்டன், பிரித்தானியா: 16-17 மணிநேரம்
7. பாரிஸ், பிரான்ஸ்: 16-17 மணி நேரம்
8. சூரிச், சுவிட்சர்லாந்து: 15 மணி நேரம்
9. ரோம், இத்தாலி: 15 மணி நேரம்
10. மாட்ரிட், ஸ்பெயின்: 15 மணி நேரம்
மிகக் குறுகிய நோன்பு நேரம்
1. கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து : 12 மணி நேரம்
2. போர்ட்டோ மான்ட், சிலி: 12 மணிநேரம்
3. புவெனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா: 12 மணி நேரம்
4. ஜகார்த்தா, இந்தோனேசியா: 13 மணிநேரம்
5. நைரோபி, கென்யா: 13 மணி நேரம்
6. கராச்சி, பாகிஸ்தான்: 13-14 மணி நேரம்
7. புது தில்லி, இந்தியா: 13-14 மணி நேரம்
வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு
வளைகுடா மற்றும் பரந்த மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நாடுகளின் சராசரி உண்ணாவிரத நேரம் சராசரியாக 13 முதல் 15 மணிநேரம் வரை குறைகிறது. இதில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார், ஈராக், ஏமன், ஈரான், லெபனான், எகிப்து, மொராக்கோ, துனிசியா, லிபியா மற்றும் பாலஸ்தீனம் ஆகியவை அடங்கும்.




