தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற மகன் கைது!

Date:

வாக்குவாதத்தில் தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த மகன் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதுடைய ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளரே உயிரிழந்தார்.

சந்தேக நபரான கல்லடியைச் சேர்ந்த கே.ராஜமகன் (வயது 32) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடை உரிமையாளரான சந்தேகநபர், மார்ச் 16 ஆம் திகதி வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனது தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த கே.கருணைராஜா (65) என்பவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (21) உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

மேலும் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்