24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

வெடியரசன் கோட்டை வரலாற்றை திரிவுபடுத்தி தகவல் பதாகை நாட்டிய கடற்படை!

நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டைக்கு அருகிலுள்ள தமிழ் பௌத்த எச்சத்தின் வரலாற்றை திரிவுபடுத்தி, இலங்கை கடற்படை தகவல் பதாகை நாட்டியுள்ளது. அங்கு நாட்டப்பட்டிருந்த தகவல் பதாகையை யாரோ அகற்றி விட்டதால், சரியான தகவல்களுடன் பதாகையை வைக்குமாறு தமக்கு கூறப்பட்டதால், அந்த பதாகையை வைத்துள்ளதாக விளக்கம் வேறு கூறியுள்ளது.

வெடியரசன்‌ கோட்டை 2007ஆம்‌ ஆண்டு வர்த்தமானி மூலம் தொல்பொருள்சின்னமாக அபையாளப்‌படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அருகில் சுமார் 50 மீற்றர்கள் தொலைவில் தமிழ் பௌத்த ஸ்தானத்தின் எச்சங்கள் 3 இடங்களில் காணப்படுகின்றன. அவை 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே தொல்பொருள் சின்னங்களாக வர்த்தமானியிடப்பட்டன.

இந்த நிலையில் கடற்படையினரால்‌, வெடியரசன்‌ கோட்டைக்கு அருகிலுள்ள பெளத்த ஸ்தானத்துக்கு அண்‌மையாக  சிங்களம்‌ மற்றும்‌ ஆங்கில மொழிகளில்‌ தகவல்‌ பதாகை, வைக்கப்‌பட்டுள்ளது.

அதுவும் வரலாற்றை திரிவுபடுத்தும் விதமாக, தவறான தகவல்களே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘சிங்கள பிராகிருத மொழி எழுத்து இங்கு உள்ளதாகவும்‌, சிங்கள – பெளத்தத்துக்குரிய எச்சம்‌ காணப்படுவதாகவும்‌’ அந்தத்‌ தகவல்‌ பதாகையில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்‌, அது தவறானது என்றும்‌ வரலாற்றை திரிபுபடுத்துவதாகவும்‌, முன்னாள்‌ வரலாற்றுத்‌துறை பேராசிரியர்‌ ப.புஸ்பரட்ணம்‌ சுட்‌டுக்காட்டுகின்றார்‌.

‘அங்கு காணப்படுபவை 14 – 15ஆம்‌ ஆண்டு நூற்றாண்டுக்குரிய தமிழ்‌ மொழியில்‌ எழுகப்பட்ட கல்‌வெட்டுக்கள்‌. சில தமிழ்ச்‌ சொற்களை எழுதுவதற்கு கிரந்த எழுத்துக்களைப்‌ பயன்படுத்தியிருக்கின்றார்கள்‌. கல்வெட்டுஅமூலாதாரத்‌லிருந்து அங்கு எழுப்பப்பட்ட பெளத்‌த ஸ்தானம்‌ தமிழருக்குரியது என்பது தெரிய வருகின்றது’ என்று புஸ்பரட்ணம்‌ தெரிவிக்கின்றார்‌.

இதேவேளை- அங்கு வைக்கப்பட்ட தகவல்‌ பதாகையை தொல்பொருள்‌ திணைக்களமே நட்டுள்ளதாக முன் வைக்கப்படும்‌ குற்றச்சாட்டுக்களை தொல்லியல்‌ திணைக்களம்‌ முற்றாக மறுத்துள்ளது.

நெடுந்‌தீவு பிரதேச செயலகம்‌ மற்றும்‌. பிரதேசசபை என்பனவும்‌ அதனைத்‌ தாம்‌ வைக்கவில்லை என்பதை மறுத்துள்ளன.

இதற்கிடையில்‌ இலங்கைக்‌ கடற்படையினர்‌, தாம்‌ நட்டுள்ள அந்தத்‌ தகவல்‌ பலகையை அகற்ற வேண்டாம்‌ என நெடுந்தீவு பிரதேசசபையிடம்‌ கோரியுள்‌ளதாக தவிசாளர்‌ நல்லதம்பி சசிக்குமார் தெரிவித்துள்ளார்‌.

முறையான அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, தகவல்‌ பலகையிலுள்ள விடயங்கள்‌ சரியானவையா என்று தொல்பொருள்‌ திணைக்களத்திடம்‌ உறுதிப்படுத்திய பின்னரே
காட்சிப்படுத்த அனுமதிக்கப்படும்‌ என்‌றும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌.

இதேவேளை- கடற்படையின் பேச்சாளர் இணைய ஊடகம்‌ ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், இலங்கை அரசாங்கத்தால் புராதன முக்கியத்துவம்‌ வாய்ந்த இடமாக வர்த்தமானி அறிவித்‌தலில்‌ மூலம்‌ பிரகடனப்படுத்தப்பட்டிருக்‌கும்‌ வெடியரசன்‌ கோட்டையில்‌, எந்தவொரு சட்டவிரோதமான நடவடிக்கைகளையும்‌ கடற்படையால்‌ முன்னெடுக்க முடியாது. வெடியரசன்‌ கோட்டையில்‌ ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த அறிவித்‌தல்‌ பலகை சில தரப்பினரால்‌ அகற்றப்‌பட்டுள்ளது. அதனை யார்‌ செய்தார்கள்‌
என்று எனக்குத்‌ தெரியாது.

யாழ்ப்பாணத்தில்‌, தொல்பொருளியல்‌ திணைக்‌களத்தின்‌ அனுவலகங்கள்‌ ஏதும்‌ இல்‌லாத காரணத்தால்‌ அறிவித்தல்‌ பலகையை மீண்டும்‌ அதே இடத்தில்‌ வைக்‌குமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப அறிவித்தல்‌ பலகை வைக்‌கப்பட்டது. தற்போது சிங்கள மற்றும்‌ ஆங்கில மொழிகளில்‌ மாத்திரம்‌ வைக்‌கப்பட்டிருக்கும்‌ இந்த அறிவித்தல்‌ .பலகைகளை தமிழ்‌ மொழியிலும்‌ வைக்க ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்‌ கலந்து
ரையாடி தேவையான நடவடிக்கைகள்‌எடுக்கப்படும்‌ – என்று குறிப்பிட்டுள்‌ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

1ம் தர மாணவர் சேர்க்கை – இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

east tamil

மகிந்த 4.6 மில்லியன் வாடகை செலுத்த வேண்டும் – அனுர

east tamil

செல்வம் அடைக்கலநாதனுக்கு பிடியாணை: பின்னணி என்ன?

Pagetamil

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

Pagetamil

மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 57 வயதுடையவர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment