24.6 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

மொரட்டுவ பல்கலைக்கழக பகிடிவதை கொடுமையின் எதிரொலி: யாழில் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலைக்கு முயன்ற மாணவன் மீட்பு!

யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள வீட்டிலிருந்து காணாமல் போன மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன், உயிரை மாய்க்க முயன்று உள்ள நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை தொல்லையை தாங்க முடியாமல் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கோப்பாய் பகுதியில் வசிக்கும் வறுமையான குடும்ப பின்னணியிலிருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 23 வயதான மாணவனே இந்த விபரீத முடிவை எடுத்தார்.

சிரேஷ்ட மாணவர்கள் தினமும் இரவு 6 மணி தொடக்கம் 10 மணிவரை தொலைபேசியில் தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்கு மரியாதை செலுத்துவேன் என்று ஆயிரம் தடவை எழுதி தருமாறும் பணித்துள்ளனர்.

இதற்கிடையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விடுமுறையில் வந்த இரண்டு மாணவர்கள், இந்த மாணவனை அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, தான் பல்கலைக்கழகத்திற்கு செல்லமாட்டேன் என்று வீட்டாரிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத வீட்டார், பல்கலைக்கழகம் செல்லுமாறு மாணவனை வலியுறுத்தினார்.

இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து மாணவன் வெளியேறிச் சென்றுள்ளார். காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் இரண்டு நாட்களும், அதன் பின்னர் தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இரண்டு நாட்களும் தனித்து தங்கியிருந்துள்ளார்.

பாழடைந்த வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் மாணவன் அங்கு தனித்து தங்கி இருந்ததை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் மாணவனை காணவில்லை என குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். பொலிசாரால் மீட்கப்பட்ட மாணவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவனின் கழுத்திலும், கைகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. விரக்தியில் அவ்வாறு செய்ததாக மாணவன் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் உடனடியாக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிடி வதக்கு உள்ளான மாணவன் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் தனித்திருந்த நிலையில் மீட்கப்பட்டதை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார். ஆயினும், மாணவன் உயிரை மாய்க்க முயற்சிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் மருத்துவ சோதனைகளில் மாணவன் அவ்வாறு முயற்சித்ததாக  கண்டறியப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட யாழ்ப்பாண மாணவன் பகிடிவதை கொடுமை காரணமாக உயிரிழந்திருந்தார். இதையடுத்து கல்வி நிறுவனங்களில் பகிடிவதை  மற்றும் வன்முறைகளை தடைசெய்யும் 1998 ஆம் வருட 20ஆம் இலக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment