Pagetamil
முக்கியச் செய்திகள்

நிலாவரையில் இராணுவத்தினர் வைத்த புத்தர் சிலை அகற்றப்பட்டது!

யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே இராணுவத்தினரால் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.

தவறுதலாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பொறுப்பதிகாரி வருத்தம் தெரிவித்ததாக வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஸ் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

நிலாவரை கிணறு பகுதியை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில், அந்த பகுதியில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் புத்தர் சிலை வைக்க ஏற்கெனவே முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், அவை தடுத்து நிறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை அங்கு சிறிய குடில் அமைக்கப்பட்டு புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டதாக பரவிய தகவலையடுத்து அங்கு பொதுமக்கள் குழுமினர். வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோசும் சம்பவ இடத்திற்கு சென்றார்.

“பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்த புத்தர் சிலையை இராணுவம் அகற்றியது. நான் அங்கு சென்ற போது குடில் மாத்திரமே இருந்தது. அந்த குடிலையும் உடனடியாக அகற்ற வேண்டுமென கூறினேன். அங்கிருந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் தொலைபேசியில் மேலதிகாரிடம் பேசிவிட்டு, கோபமாக குடிலை பிடுங்கிச் சென்றார்.

பின்னர் முகாமிலிருந்து வந்த அதிகாரியொருவர் தன்னை மேஜர் மஞ்சுள என அறிமுகப்படுத்தி, சிறு தவறு நடந்து விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு பொலிசாரும் வந்தனர். புத்தர் சிலை அகற்றப்பட்டு நிலைமை சுமுகமாகிய பின்னர் அவர்கள் சென்றனர்“ என்றார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

Leave a Comment