25.9 C
Jaffna
March 29, 2024
தமிழ் சங்கதி

ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை நிராகரித்த செல்வம் அடைக்கலநாதன், விக்னேஸ்வரன்!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் இதே போன்ற அழைப்பை நிராகரித்துள்ளார்.

ரணில்- பெரமுன ஆட்சியமைந்த பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களும் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தனர். முன்னைய கோட்டாபய விசுவாசிகளும், அப்போதைய பொதுஜன பெரமுன அரசின் பங்காளிகளும் கோட்டாபய ராஜபக்சவினால் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆட்சி மாற்றத்தின் பின், ரணில்- பெரமுன தரப்பினரால் ஒருங்கிணைப்புக்குழு தலைவவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக டக்ளஸ் தேவானந்தாவும், வவுனியா அபிவிருத்திக்குழு தலைவராக ஈ.பி.டி.பியின் மற்றொரு எம்.பியான கு.திலீபன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆட்சியில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அப்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைவராகவே விரும்பியிருந்தார்.என்றாலும், கோட்டாவிற்கு டக்ளசை விட அங்கஜனுடன் நெருக்கம் அதிகமாக இருந்ததோ என்னவோ, அங்கஜன் இராமநாதனே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போதைய புதிய நியமனங்களின் போது, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கு தமிழ் தேசிய கட்சிகளின் எம்.பிக்களை நியமிக்கவே அரசாங்கம் விரும்பியிருந்தது. யாழ்ப்பாணத்திற்கு க.வி.விக்னேஸ்வரனையும், மன்னாரிற்கு செல்வம் அடைக்கலநாதனையும் நியமிக்க அரசு விரும்பியிருந்தது.

எனினும், இருவருமே அந்த யோசனையை நிராகரித்து விட்டனர். விக்னேஸ்வரன் ஒருமுறை மறுத்ததுடன், அரசாங்க தரப்பிலிருந்து கேட்பதை நிறுத்தி விட்டார்கள்.

ஆனால் செல்வம் அடைக்கலநாதனை அரச தரப்பு விடவில்லை. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம்புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட போதும், பிரதமர் தொலைபேசியில் செல்வம் அடைக்கலநாதனை அழைத்து, மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுள்ளார். இந்த பதவியை ஏற்பதன் மூலம், மக்களிற்கு அபிவிருத்தி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாமென பிரதமர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றாலும், செல்வம் அடைக்கலநாதன் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நோக்கிய செயன்முறையில், நம்பிக்கை கொள்ளத்தக்க எந்தவிதமான உடனடி நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. காணி சுவீகரிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம, மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என எதையும் அரசாங்கம் செய்யாத சூழலில், அரசை காப்பாற்றும் விதமான எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டோம் என செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

Pagetamil

‘திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்’: தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

Pagetamil

‘எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்’: சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி!

Pagetamil

Leave a Comment