ஆபாச வீடியோ பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் தனது மனைவியை தீ வைத்து எரித்து கொன்றார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கிஷோர் பட்டேல் (33) என்பவரே, மனைவி காஜலை (30) கொன்றார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கிஷோர் படேல் ஒரு ஆபாச வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தபோது அவரது மனைவி இதனைக் கவனித்தார். இதுபோன்ற வீடியோக்களைப் பார்ப்பதை நிறுத்துமாறு கணவரிடம் அந்தப் பெண் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
திங்கள்கிழமையும் இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த வாலிபர் காஜலைத் தாக்கி தீ வைத்ததாக போலீஸார் கூறுகின்றனர். பெண் அளித்த மரண அறிவிப்பிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
40 சதவீத தீக்காயம் அடைந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் படான் பகுதியைச் சேர்ந்த கிஷோருக்கும், மும்பையைச் சேர்ந்த காஜலுக்கும், ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மும்பையில் உள்ள வைர நகை தொழிற்சாலையில் பணிபுரியும் போது காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
காஜலுக்கு இது இரண்டாவது திருமணம். முதல் கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
கைதான கிஷோர் கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.




