சேபால் அமரசிங்க மீதான வழக்கு முடிவுக்கு வந்தது!

Date:

யூடியூப் பயனாளர் சேபால் அமரசிங்க மீதான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தலதா மாளிகை தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சேபால் அமரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு தனது வாடிக்கையாளர் மன்னிப்புக் கோர விரும்புவதாக ஒரு நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்திருந்தார். இதனை பரிசீலித்த சட்டமா அதிபர், சேபால் அமரசிங்கவுக்கு எதிரான வழக்கை தொடர்வதில்லை என தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தீலிபா பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்/

இதேவேளை, இவ்வாறான குற்றங்களை மீண்டும் செய்ய மாட்டேன் என சேபால் அமரசிங்க பகிரங்க மன்னிப்பு கோரினார்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்