சம்பளம் கேட்ட 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் (VIDEO)

Date:

குடும்ப வறுமைக்காக வேலைக்கு வந்து செயப்பாடுகள் பிடிக்காததால் வேலையே விட்டு நின்ற சிறுமிக்கு உரிமையாளர் இழைத்த கொடூரம் தொடர்பான தகவல் அம்பலமாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் வசித்து வரும் 16 வயது சிறுமி, தனது குடும்ப வறுமைக்காக அங்குள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மளிகைக்கடையை ஓம் கார் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே, அங்கு பணிக்கு செல்ல விரும்பாத சிறுமி, மளிகை கடையில் இருந்து நின்றுள்ளார். அவருக்கு வழங்கப்படவேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை. சிறுமி தனது ஊதியத்தை ஓம் காரிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஓம் கார், கடந்த சனிக்கிழமை இரவில் சிறுமியின் வீட்டிற்கு சென்று, அவரை அடித்து துன்புறுத்தி கழுத்தில் கத்தி வைத்து வெட்டி வீதியில் அவரை அழைத்து செல்கிறார். இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் காணொளி வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/i/status/1627286237446012929

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்