யாழ் கலாசார மையம் திறப்பு: இந்திய அமைச்சர் இன்று யாழ் வருகிறார்; ரணில் சனி வருவார்!

Date:

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் யாழ்ப்பாணத்திற்கு இன்று(09) வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைப்பதற்காகவே வருகை தரவுள்ளார். 11ஆம் திகதி திறப்பு விழா நடைபெறும். அன்றையதினம் ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம் செய்வார்.

அரசுமுறைப் பயணமாக இன்று(9) இலங்கை வரும் இணையமைச்சர், முருகன் பெப்ரவரி 12ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்திய அரசின் நிதி உதவி மூலம் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்திற்கு இநதியப் பிரதமர் நரேந்திர மோடி 2015 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார்.

இந்த மையம் அருங்காட்சியகம், 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு வசதியுடன் கூடிய அரங்கம் 11 தளங்களுடன் அமைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்