2 மாதங்களாக பயணிக்கும் மற்றொரு இலங்கை அகதிகள் படகு: மொரீஷியஸில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு புறப்பட்டது!

Date:

18 அகதிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை மீன்பிடி படகு ஒன்று, மொரீஷியஸில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு, மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் சிலாபம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட Imula 0437 CHW என்ற மீன்பிடி படகே அகதிகளை ஏற்றியபடி பயணிக்கிறது.

இந்த மீன்பிடிப் படகு மொரீஷியஸ் துறைமுகத்தை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டதாக, மொரீஷியஸ் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிவ கூத்தன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இருப்பினும், படகின் கப்டன் தனது அடுத்த இலக்கை குறிப்பிடவில்லை. இந்த படகு தமது நாட்டிற்கு வந்து சேருமென எதிர்பார்ப்பதாக ரீயூனியன் தீவின் அதிகாரியொருவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் சிவ கூத்தன் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, இந்த அகதிகள் படகு மொரீஷியஸ் தேசிய கடலோர காவல்படையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

படகுப் பயணத்தின் நோக்கம் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது, ஆபிரிக்கா நோக்கி செல்லும் தாம் உணவு, எரிவாயு மற்றும் எரிபொருளை சேமித்து வைக்க விரும்புவதாக கப்டன் விளக்கினார். மொரிஷியஸ் அதிகாரிகள் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். எரிபொருள் நிரப்புதல் முடிந்ததும், கடலோர காவல்படையினரின் துணையுடன் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மூன்று குழந்தைகள் உட்பட 18 பயணிகள் படகில் உள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல், இந்த படகு மொரிஷியஸ் பிராந்திய நீரில் இருந்தது.

டிசம்பர் 4 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டு, “ஆப்பிரிக்க நாடு” நோக்கிச் செல்ல விரும்புவதாக படகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த படகு ஜனவரி 15 ஆம் திகதி டியாகோ கார்சியாவிற்கு அருகில் தரித்து நின்றது அவதானிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, ரீயூனியன் அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், பெப்ரவரி 6 ஆம் திகதி இலங்கை மீன்பிடி படகு ரீயூனியன் தீவுக்கு வரலாம் என்று குறிப்பிட்டது.

“கடந்த சில மணிநேரங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, இலங்கைக் கொடியை பறக்கவிட்ட ஒரு மீன்பிடி படகு திங்கள்கிழமை ரீயூனியனுக்கு வரக்கூடும்” என்று அது கூறியது. “அது உறுதிசெய்யப்பட்டால் இந்த வருகையை நிர்வகிப்பதற்காக அரசின் சேவைகள் அணிதிரட்டப்படுகின்றன“ என குறிப்பிட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரீயூனியனுக்கு வரும் இலங்கைக் குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்லும் இரண்டாவது படகு இதுவாகும். ஜனவரி 14 அன்று, 69 பேருடன் மீன்பிடி படகு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. மார்ச் 2018 இல் இலங்கையிலிருந்து ரீயூனியனுக்கு முதலாவது அகதிகள் படகு வந்ததில் இருந்து, இதுவரை  466 பேருடன் 11 படகுகள் வந்துள்ளன. 314 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்