கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி விளையாட்டரங்கில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபர் மற்றுமொரு கொலையில் சந்தேக நபர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மருதானை பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கி கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் இல்லத்தில் வளர்ந்த சந்தேக நபர் இரண்டு பெயர்களில் தோன்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் புனித சில்வெஸ்டர் மைதானத்தில் பாதுகாவலருடன் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவங்க நாணயக்கார என்றழைக்கப்படும் வசந்த குமார திலகரத்ன கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



