ஐஸ் பார்ட்டியில் சிக்கிய அரச புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்!

Date:

அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) உத்தியோகத்தர் ஒருவர், பேலியகொடையில் உள்ள வீடொன்றில் மேலும் இருவருடன் இணைந்து ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய போது, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அரச புலனாய்வு சேவையின் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். இந்த புலனாய்வு உத்தியோகத்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைக்கு அடிமையானவர்கள் குழுவுடன் போதைப்பொருள் உட்கொள்வதற்காக அவர் அடிக்கடி பேலியகொடைக்கு வருவதாகவும் கிடைத்த தகவலின் பிரகாரம் இவரை கைது செய்ய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் இருந்து 550 மில்லிகிராம் ஐஸ் மற்றும் ஆறு கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு

‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் கைதான சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...

மொட்டு செயலாளரின் மிரட்டலை சிஐடி விசாரிக்கும்

பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...

ஈரான் போரின் போது அமெரிக்கா தனது நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் ‘ஏறக்குறைய அனைத்தையும்’ பயன்படுத்தியுள்ளது

ஈரானுடனான தனது ஐந்தாண்டுப் போரின் போது, ​​அமெரிக்க இராணுவம் தனது கையிருப்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்