இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலய அலுவலகத்தில், இந்தியாவின் காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையோடு ஆரம்பமாகியகுடியரசு தின நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ். இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களினால் இந்திய நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ். இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டதோடு இந்திய காவல் படையினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதரக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
1