சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி குறித்த மேலும் பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் உடனான தனது உறவு குறித்து மலாக்க இயக்குனரகத்தில் நடந்த விசாரணையில் நோரா ஃபதேஹி சில தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்த தகவல்கள் பொய்யானவை என சுகேஷ் தற்போது குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும், கடத்தல்காரன் என்றும் கூறப்படும் நபருடன் தனக்கு எந்தத் தனிப்பட்ட உறவும் இல்லை என்றும், பணத்திற்கு ஈடாக தனது காதலியாக இருக்குமாறு தன்னிடம் கேட்கப்பட்டதாகவும் நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து குற்றவாளி சுகேஷ் 4 பக்க அறிக்கை வெளிப்படுத்தியுள்ள 4 பக்க அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சிக்கிய மற்றொரு நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் டேட்டிங்கில் இருந்தாலும், தனது வாழ்க்கையில் நோரா ஃபதேஹியே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சுகேஷ் தனது அறிக்கையில் சொகுசு கார்கள், விலையுயர்ந்த பைகள் மற்றும் பிற பொருட்களை தனக்காக மட்டுமல்ல, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்காகவும் நோரா ஃபதேஹி வாங்கினார் என தெரிவித்துள்ளார்.
“நோரா, ஜாக்குலின் மீது எப்போதும் பொறாமை கொண்டவர். ஜாக்குலினுக்கு எதிராக எப்போதும் என்னை மூளைச்சலவை செய்து கொண்டிருந்தார். நான் ஜாக்குலினை விட்டுவிட்டு தன்னுடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று நோரா விரும்பினார், நோரா ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது என்னை அழைக்க முயற்சிப்பார், நான் அழைப்பை ஏற்கவில்லையென்றால், அழைப்பை ஏற்கும் வரை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருப்பார்“ என தெரிவித்துள்ளார்.
சுகேஷ் தனக்கு ஒரு காரைக் கொடுக்க விரும்பினார், ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டேன் என்று நோரா கூறியிருந்தார்.
சுகேஷ் வெளியிட்ட புதிய அறிக்கையில் இதை மறுத்துள்ளார்.
தற்போதுள்ள தனது கார் ‘மெர்சிடிஸ் சிஎல்ஏ’ தன்னை ‘மலிவாக’ காட்டுவதாக நோரா உணர்வதாகவும், எனவே, தனக்கு மற்றொரு ஸ்வாங்கி காரை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நோரா காரை வாங்க விரும்பவில்லையென கூறுகிறார். அவர் அதை தனக்காக எடுத்துக் கொள்ளவில்லை என்பது மிகப் பெரிய பொய், ஏனென்றால் அவர் என் வாழ்க்கைக்குள் வந்த பின்னர், அவரது காரை மாற்ற வேண்டியிருந்தது, ஏனெனில் அவர் மிகவும் மலிவாகக் காணப்பட்ட ‘சிஎல்ஏ’ காரையே வைத்திருந்தார். அதனால் விலையுயர்ந்த காரை வாங்கி தருமாறு நச்சரித்தபடியிருந்தார். இது பற்றிய அரட்டைகள் மற்றும் ஸ்கிரீன் ஷொட்கள் அமலாக்கத்துறையிடம் நன்றாக உள்ளன, எனவே எந்த பொய்யும் இல்லை, ”என்று அவர் கூறினார்.
நோரா இன்று வரை பயன்படுத்தும் ஹெர்ம்ஸ் பைகளை வாங்கிய சிட்டைகளை காண்பிக்க முடியாது என்றும் சுகேஷ் குற்றம் சாட்டினார், ஏனெனில் அவை அனைத்தும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன.
தான் விரும்பும் விலையுயர்ந்த பைகளின் படங்களை தனக்கு அனுப்பியதாகவும், அவற்றை தான் வாங்கிக் கொடுத்ததாகவும் சுகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
“அவர் தனக்குத் தேவையான ஹெர்ம்ஸ் பைகள் மற்றும் நகைகளின் பல படங்களை எனக்கு அனுப்பினார். அதை நான் அவருக்குக் கொடுத்தேன், அவற்றை அவர் இன்றுவரை பயன்படுத்துகிறார், அவரிடம் உள்ள ஒரு ஹெர்ம்ஸ் பையை வாங்கிய சிட்டையை காண்பிக்க சொன்னால், அவரால் காண்பிக்க முடியாது. அந்தப் பைகள் 2 கோடிக்கு மேல் மதிப்புள்ளவை“ என்றார்.
மொராக்கோவில் தனக்காக ஒரு வீடு வாங்குவதற்காக நோரா தன்னிடம் இருந்து ஒரு பெரிய தொகையை எடுத்ததாகக் கூறினார்.
“இன்று நான் அவருக்கு வீடு தருவதாக உறுதியளித்ததாக கூறுகிறார். ஆனால் அவர் ஏற்கனவே மொராக்கோவின் காசாபிளாங்காவில் தனது குடும்பத்திற்கு ஒரு வீட்டை வாங்குவதற்காக என்னிடம் இருந்து ஒரு பெரிய தொகையை எடுத்திருக்கிறார். அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்து தப்பிக்க இந்த புதிய கதைகள் அனைத்தும் அவரால் வடிவமைக்கப்பட்டுள்ளன”
சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் நோரா மற்றும் ஜாக்குலின் இருவரும் அமலாக்கத்துறை தரப்பில் சாட்சிகளாக மாறியுள்ளனர். அவர் தனது வழக்கில் சாஹத் கண்ணா மற்றும் நிக்கி தம்போலி உள்ளிட்ட இருவர் மற்றும் பிற நடிகைகளின் பெயரைக் குறிப்பிட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் சுகேஷால் ஏமாற்றப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் அளித்த வாக்குமூலத்தில், சுகேஷ் தன் உணர்வுகளுடன் விளையாடி, தனது வாழ்க்கையுடன் விளையயாடி விட்டார் என குற்றம்சாட்டியிருந்தார்.
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர், ஜெயலலிதாவின் மருமகன் என சுகேஷ் தன்னை அறிமுகப்படுத்தியதாகவும், தான் நம்பி ஏமாந்து விட்டதாகவும் ஜாக்குலின் தெரிவித்திருந்தார்.
தற்போது டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் சுகேஷ் அடைக்கப்பட்டுள்ளார்.