இலங்கை இரட்டையர் அமைப்பு (Sri Lanka Twins Organization), 4,000 இரட்டையர் மற்றும் இரட்டையர் அல்லாத பங்கேற்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் உலகளாவிய இரட்டையர் தின விழாவை ஜூலை 24 முதல் 31 வரை நடத்தவுள்ளது.
இந்த நிகழ்வானது உலகளாவிய இரட்டையர் கலாச்சார விழாவை மையப்படுத்தி நடத்தப்படுவதுடன், நாடு முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் சுற்றுப்பயணம் மற்றும் உலகளாவிய இரட்டையர் இசை விழா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
உலக இரட்டையர் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்கும் முதல் மூன்று ஆண், பெண் இரட்டையர் இணையை தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி மே 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது முதல் முறையாக இலங்கையில் நடைபெறுகிறது.
ஆரம்ப சுற்றுகள் பெப்ரவரி 12 ஆம் திகதி தொடங்கும்.
இது தொடர்பில் அறிவித்தல் விடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (24) நடைபெற்றது.