கனடாவில் துயரச்சம்பவம்: யாழ் வாசியும், குழந்தையும் விபத்தில் பலி!

Date:

கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு வீதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டியிருந்ததாகவும், ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புஸ்பராசா பகீரதன் மற்றும் பகீரதன் ரியானா ஆகியோரே உயிரிழந்தனர். பகீரதன்  யாழ்ப்பாணம், நீர்வேலியை பூர்வீகமாக கொண்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்