கூட்டமைப்பிலிருந்து பிரிந்தாலும் தமக்கு வாக்களிக்கக்கோருகிறார் காரைதீவு தவிசாளர்!

Date:

மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம். போலிகளை கண்டு ஏமாறாது மக்கள் தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி தேர்தல் -2023 தொடர்பில் அம்பாறை ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

தமிழரசுக்கட்சி வடகிழக்கு 8 மாவட்டங்களில் வீட்டு சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 7 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுகின்றது. இதில் அழிவின் விழிம்பு வரை காரைதீவு நாவிதன்வெளி பிரதேச சபைகள் இருந்து வருகின்றன. இரு சமூகங்களும் வாழுகின்ற சபைகளாக இவ்விரு சபைகளும் இருக்கின்றன.

தற்போது காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் ஒரு மைதானத்தில் விளையாடுவது போன்று இறக்கப்பட்டுள்ளார்கள்.12 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் 11 ஆசனங்களுக்காக 196 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் கட்சிகள் சுயேட்சை குழுக்கள் வேட்பாளர்கள் ஏன் களமிறங்கியுள்ளார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.

மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடன் இத்தேர்தலில் மேற்கூறியவர்கள் இறங்கியுள்ளனர். எனவே எமது இருப்பை தக்கவைக்க வாக்களியுங்கள். போலியான வாக்குறுதிகளை வழங்குகின்ற கட்சிகள் சுயேட்சைக்குழுக்களின் செயற்பாட்டிற்கு மக்கள் துணை போக கூடாது. எமது ஆட்சிக்காலத்தில் பல விடயங்களை இச்சபையில் இருந்து மேற்கொண்டுள்ளோம். எமது செயல்களையும் நாங்கள் செய்த செயற்பாடுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம்.

நிச்சயமாக இம்முறையும் வீட்டுச்சின்னத்திற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த மக்களை சில சுயேட்சைக் குழுக்களும் கட்சிகளும் மூளைச்சலவை செய்ய முற்படுகின்றன. எனவே போலிகளை கண்டு ஏமாறாது மக்கள் தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என குறிப்பிட்டார்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்