தனங்கிளப்பு பன்றிப் பண்ணைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Date:

மக்கள் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமையப்பெற்று நடைபெற்று வந்த பன்றிப் பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி இன்று காலை 10 மணியளவில் மறவன்புலவு தனங்கிளப்பு மக்கள் இணைந்து போராட்த்தில் ஈடுபட்டனர்.

தனங்கிளப்பு, மற்றும் மறவன்புலவு கிராமத்தின் நடுவே குறித்த பண்ணை அமைந்துள்ளது. இப் பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு உணவாக வைத்தியசாலை கழிவுகள், உணவகங்களில் கழிக்கப்படும் கழிவுகள், இறைச்சிக்கடை, மீன் கடைகளில் வீசப்படும் எஞ்சிய கழிவுகள் ஆகியவற்றை சேமித்து உணவாக வழங்கி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் பன்றிகளுக்கு போடப்படும் உணவு கழிவுகளை காகங்கள் தூக்கி வந்து குடிநீர் கிணற்றுக்குள் வீசுவதாகவும் இதனால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் பல முறை மக்கள் எழுத்து மூலமாக அதிகாரிகளுக்கு முறையிட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் பிரதேச சபை தலைவரை தொடர்பு கொண்ட போது குறித்த பண்ணைக்கு எந்தவித அனுமதியும் பிரதேச சபை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சுகாதார உத்தியோகத்தர்களினால் குறித்த பண்ணை சுகாதார சீர்கேடு சரி செய்யப்பட வேண்டும் என எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டும் எந்த விதமான முன்னேற்றமும் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் குறித்த பண்ணை முன்பாக ஒன்று கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சாவகச்சேரி பொலிசார் பண்ணையின் நிலைமைகளை அவதானித்துடன் மக்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

மக்களின் கோரிக்கையினை ஏற்று பண்ணையின் உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அனுமதி இன்றி நடத்தப்பட்டுவரும் குறித்த பண்ணைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை முறைபாடு பதிவு செய்ய பொலிஸ் நிலையம் வருமாறும் பொலிசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரனுக்கு வாழ்த்து சொன்னவருக்கு சபையில் இடமில்லை! ரவிகரன் எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர்...

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்