26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு பொலிசார் பி அறிக்கை

நீதித்துறையில் சட்டமா அதிபரின் தலையீடுகளை கண்டித்து ஜனவரி 18ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சட்டத்தரணிகள் குழுவிற்கு எதிராக கெசல்வத்தை பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

பி அறிக்கையின்படி, சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, நுவான் போபகே மற்றும் சேனக பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று தேர்தல் சட்டங்கள் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தின் விதிகளை மீறி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கெசல்வத்தை பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்தவை தடுக்க சட்டமா அதிபர் முயற்சித்ததை கண்டித்து சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 57 வயதுடையவர் உயிரிழப்பு

east tamil

20 நாட்களில் 8 துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!

Pagetamil

காணாமல் போன இராணுவ துப்பாக்கிகள் பாதாள குழுக்களில்; 13 வீரர்கள் கைது

east tamil

அனுர அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள்: நாமல் ராஜபக்சவின் இருமுக பாராட்டுகள்

east tamil

Leave a Comment