நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பெப்ரவரி 7 ஆம் திகதி தனது அலுவலகத்தில் கடைசி நாளாக இருக்கும் என்று கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் பதவி விலகவில்லை; எதிர்வரும் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெறும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அவரும் அவரது தொழிலாளர் கட்சியும் இந்த ஆண்டு தேர்தலில் கடுமையான சவாலை சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது கட்சி வரலாற்று விகிதாச்சாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகள் பழமைவாத கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது.
2017 ஆம் ஆண்டில் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் பிரதமரான 42 வயதான ஆர்டெர்ன், கொரானா வைரஸ் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் சிறப்பாக செயற்பட்டதற்காக உலகளவில் பாராட்டப்பட்டார். கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் 51 பேரைக் கொன்ற வெள்ளை மேலாதிக்கவாத தாக்குதலை அடுத்து நியூசிலாந்தின் முஸ்லீம் சமூகத்தை அவர் தழுவிய விதத்திற்காகவும் அவர் பரவலாகப் பாராட்டப்பட்டார்.
ஆனால் பணவீக்கம் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் அதிகபட்சமாக உயர்ந்துள்ளதால், மத்திய வங்கி பணவீக்கத்தை தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் அங்னு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டில் அவரது புகழ் குறைந்துள்ளது.
நீர் உள்கட்டமைப்பை அரசாங்கம் மாற்றியமைத்தல் மற்றும் விவசாய உமிழ்வு திட்டத்தை அறிமுகப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளால் நாடு பெருகிய முறையில் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது.
நியூசிலாந்தின் அடுத்த பொதுத் தேர்தல் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறும் என்று ஆர்டெர்ன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அடுத்த தொழிலாளர் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும், அந்த வாக்கெடுப்பில் கட்சி வெற்றி பெறும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
நியூசிலாந்து துணைப் பிரதம மந்திரி கிராண்ட் ரொபர்ட்சன், நிதி அமைச்சராகவும் பணியாற்றுகிறார், அவர் அடுத்த தொழிலாளர் தலைவராக நிற்க விரும்பவில்லை என்று ஒரு அறிக்கையில் கூறினார்.