மோதிவிட்டு தப்பியோடி ஜீப்பை தேடும் பொலிசார்

Date:

நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் புதன்கிழமை(28) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் தப்பி சென்ற ஜீப் வண்டி தொடர்பில் மக்களின் ஒத்துழைப்பினை பொலிஸார் கோரியுள்ளனர்.

சம்பவ தினமன்று நிந்தவூர் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றினையும் மோதிய ஜீப் வண்டி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றிருந்தது.

எனினும் குறித்த ஜீப் வண்டியை கண்டுபிடிப்பதற்காக அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காணொளிகளை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

-பாருக் சிகான்-

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்